×

دين ضمن حقوق المرأة (تاميلي)

إعداد: முஹம்மத் இம்தியாஸ்

الوصف

مقالة باللغة التاميلية تتحدث عن الآتي: • هل المرأة مخلوق دنيئ • هل المرأة سبب في خطأ آدم • هل الإنجاب عذاب للمرأة كجزاء • عداوة المرأة مع الحية وغيرها من مفتريات العهد الحديث.

تنزيل الكتاب

    பெண்ணுரிமையை பாதுகாத்த மார்க்கம் எது?

    பெண்ணாக பிறந்தது பாவம் – 1 பைபிள் கூற்று

    ] Tamil – தமிழ் –[ تاميلي

    M.S.M.இம்தியாஸ் யூசுப் ஸலபி

    2014 - 1435

    دين ضمن حقوق المرأة

    مقارنة بين مقولة العهد الحديث بأن ولادة المرأة ذنب

    « باللغة التاميلية »

    محمد إمتياز يوسف

    2014 - 1435

    பைபிளின் பார்வையில் பெண்ணாக பிறப்பது பாவம்.

    M.S.M. இம்தியாஸ் யூசுப் ஸலபி

    மக்களுக்கு நற்போதனை செய்து அவர்களது பண்பாடுகளை வளர்த்து அவர்களை நேர் வழியில் இட்டுச் செல்வதுதான் ஒரு மதத்தின் இலட்சியமாகும்.

    அம்மக்கள் எவ்வளவுதான் கெட்ட வர்களாக, பாவிகளாக இருந்தாலும் அவர்களையும் புனிதர்களாக்க வழி காட்ட வேண்டுமே தவிர புண்படுத்தக் கூடியதாக, இழிவுபடுத்தக் கூடியதாக, மட்டம் தட்டக் கூடியதாக போதனை கள் இருக்கக் கூடாது.

    துரதிஷ்டவசமாகஇந்த முறையை தான் பெண்கள் விடயத்தில் பைபிள் கையாளுகிறது. உலகில் முதன்மை வகிக்கக் கூடிய ஒரு மதத்தில் பெண்கள் இழிவுபடுத்தப் படுகிறார்களா என்று பலரும் ஆச்சரியப்படலாம். இழிவான முறையில் பேசக் கூடிய போதனைகள் பைபிளிலும் இருக்கின்றனவா? என்றும் கேட்கலாம்.

    பின்வரும் பைபிள் வசனங்களைப் படித்துப் பாருங்கள்.

    'சாவை விடக் கசப்பானதொன்றைக் கண்டேன்.

    அதுதான் பெண். அவள் உனக்குக் காட்டும் அன்பு ஒரு கண்ணியைப் போல் அல்லது ஒரு வலையைப் போல் உன்னைச் சிக்க வைக்கும். உன்னைச் சுற்றிப்பிடிக்கும்.

    அவளின் கைகள் சங்கிலியைப் போல் உன்னை இறுக்கும். கடவுளுக்கு உகந்தவனே அவளிடமிருந்து தப்புவான். பாவியோ அவளின் கையில் அகப்படு வான்.... ஆனால், ஒன்று தெரிந்தது. மனிதன் எனத் தக்கவன் ஆயிரத்தில் ஒருவனே என்று கண்டேன். பெண் எனத் தக்கவள் யாரையுமே நான் கண்ட தில்லை.' (பிரசங்கி. 7:26-28)

    பெண்ணை நம்பாதே, அவள் ஒரு மாயக் காரி. ஏமாற்றுக்காரி, உன்னை சிக்கவைக்கும் கண்ணியவள். பொறி வைக்கும் விஷமக்காரி. அவளிடத்தில் மாட்டிக் கொள்பவன் பாவி. தப்பி விடு பவன் கடவுளுக்கு உகந்தவன். பெண் என்ற மனிதப் பிறவியைக் காண்பது கடினம். ஆயிரம் பேரில் 'ஒரு நல்ல பெண்' கிடைப்பதும் அரிது.

    மரணத்தை விட கசப்பானவள். அண்டிப் பழக அருகதை யற்றவள். அவளை விட்டும் ஒதுங்கி யிருப்பவனே கர்த்தருக்கு உகந்தவன் என்றெல்லாம் வர்ணனைகளை முன் வைத்து நற்போதனை செய்கிறது.

    ஆக மொத்தத்தில் பெண்ணை ஒரு மனிதப் பிறவியாகவே கருத வில்லை. பெண்ணாகப் பிறப்பதே பாவம் என்ற சிந்தனையை ஊட்டுகிறது.

    'பெண்கள் அமைதியாக இருந்து மிகுந்த அமைதியோடு கற்றுக் கொள்ளட்டும். பெண்கள் கற்றுக் கொடுக்கவோ, ஆண்களைக் கட்டுப் படுத்தவோ நான் அனுமதிக்க மாட்டேன். அவர்கள் அமைதியாக இருக்க வேண்டும். ஏனென்றால், ஆதமே முதலில் உருவாக்கப்பட்டார். மேலும் ஆதம் ஏமாற்றப்படவில்லை. பெண் தான் ஏமாந்து கட்டளையை மீறினாள். (1திமோத்தேயு 2:11)

    பெண்கள் ஆண்களுக்குக் கட்டுப் பட்டு செவி சாய்த்து நடக்கவேண்டும். அமைதியாக இருந்து வேதத்தைக் கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்கக் கூடாது. காரணம் முதலில் ஆதாம் (ஆண்தான்) படைக்கப் பட்டார். அதன் பின் தான் பெண் (ஏவாள்) படைக்கப் பட்டாள். எனவே, பெண் இரண்டாம் பட்சம் தான். ஆணின் ஆதிக்கத்திற்குள் பெண் அடங்க வேண்டுமே தவிர பெண்ணின் ஆணைக்கு ஆண் அடங்கக் கூடாது.

    ஆதாமும் ஏவாளும் ஒரு மரத்தை அணுகக் கூடாது என கர்த்தர் கட்டளையிட்ட போது அக் கட்டளையை மீறி ஆதாமை ஏமாற்றி வஞ்சித் தவள் ஏவாள். எனவே பாவத்திற்கு காரண மானவள் பெண்தான். ஆகவே பெண் ஆணுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று வியாக்கியானம் சொல்கிறது பைபிள்.

    ஏவாள் என்ற ஒரு பெண் செய்த தவறுக் காக உலகம் உள்ளவரை ஒட்டு மொத்த பெண் சமூகத்தையும் இழிவாக சித்தரித்து அதனை வேத நூலிலும் பதிவு செய்து பாராயணமும் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மனிதனும் தான் செய்த பாவங்களுக்குப் பொறுப்பா ளியாக இருக்க வேண்டுமே தவிர மற்றவர்களை அதற்குப் பலியாக்கக் கூடாது. ஆதாமும் ஏவாளும் செய்த தவறுக்கு பெண் சமூகம் எப்படிப் பொறுப்பாக முடியும்?

    ஆதாமும், ஏவாளும் செய்த குற்றம் என்ன? அதற்கு அவர்கள் பெற்ற தண்டனை என்ன? இதற்காக பெண் சமூகத்தை இழிவு படுத்துவதன் நோக்கம் என்ன?

    பின்வருமாறு பைபிள் கூறுகிறது:

    ஆண்டவராகிய கடவுள் மனிதனை (ஆதா மை) கூப்பிட்டு 'நீ எங்கே இருக்கிறாய்?' என்று கேட்டார்.

    'உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன் என்றான் மனிதன்.

    நீ ஆடையின்றி இருக்கிறாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக் கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ? என்று கேட்டார்.

    அப்பொழுது அவன் என்னுடன் இருக்கும் படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள். நானும் உண்டேன் என்றான்.

    ஆண்டவராகிய கடவுள், “நீ ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று பெண்ணைக் கேட்க அதற்குப் பெண் 'பாம்பு' என்னை ஏமாற்றியது. நானும் உண்டேன் என்றாள். (ஆதியாகமம்:3:9-19)

    கர்த்தரால் தடுக்கப்பட்ட ஒரு கனியை சாப்பிடுவதற்கு ஆதாம், ஏவாள் மற்றும் பாம்பு ஆகிய மூவரும் காரண மானவர்கள் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன. இதுவே மனிதன் செய்த முதல் பாவம் என கூறப்படுகிறது.

    ஏவாளை ஏமாற்றி கனியை சாப்பிடச் செய்ய பாம்பு மேற் கொண்ட உரையாடலைப் பற்றி பைபிள் கூறும் போது-

    ஆண்டவராகியகடவுள் உருவாக்கிய காட்டு விலங்குகளிலெல்லாம் பாம்பு மிகவும் சூழ்ச்சி மிக்கதாக இருந்தது. அது பெண்ணிடம், கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலி ருந்தும் உண்ணக் கூடாது என்றது உண்மையா?' என்று கேட்டது.

    பெண், பாம்பிடம் தோட்டத்தில் இருக்கும் மரங்களின் கனிகளை நாங்கள் உண்ணலாம். ஆனால் தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்;டும் நீங்கள் உண்ணக் கூடாது, அதைத் தொடவும் கூடாது. மீறினால் நீங்கள் சாவீர்கள்” என்று கடவுள் சொன்னார் என்றாள்.

    பாம்பு பெண்ணிடம், நீங்கள் சாகவே மாட்டீர்கள். ஏனெனில் நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும் என்றது.|| (ஆதியாககம்:3:1-5)

    பைபிளின் போதனைப் பிரகாரம் ஏவாள் பாம்பின் அலங்காரமான வார்த்தைகளை நம்பி னாள். அதில் மறைந்துள்ள சூழ்ச்சியை அவள் அறியவில்லை. எனவே கனியை ஆதாமுக்கும் கொடுத்தாள்.ஆதாம் மறுப் பேதும் தெரிவிக்காமல் சாப்பிட்டார்.

    அந்த மரம் உண்பதற்குச் சுவையான தாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதா கவும் அறிவு பெறுவதற்கு விரும்பத் தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான். (ஆதியாககம்:3:6)

    கர்த்தரின் கட்டளையை மீறி பாவம் புரிந்ததில் மூன்று பேர் சமபங்காளிகளாக சம்பந்தப் பட்டிருக்க, ஏவாளை மட்டும் காரணம் காட்டி பெண்களை மட்டம் தட்டுவது சரிதானா? கனியைச் சாப்பிட ஏவாள் மறுப்புத் தெரிவித்த அளவு கூட ஆதாம் மறுப்பேதும் தெரிவிக்க வில்லையே.

    ஏவாள் செய்த குற்றத்திற்கு கர்த்தர் எத் தண்டனையையும் வழங்காமல் விட்டதனால் அவளை இழிவான பெண் என்று கூற வேண்டி ஏற்பட்டதா என்றால் அதுவும் இல்லை. சம்பந்தப் பட்ட மூவருக்கும் கர்த்தரால் உடனே தண்டனையும் வழங்கப்படடுள்ளது என்பதை பின்வரும் பைபிள் வசனம் விளக்குகிறது.

    ஆண்டவராகிய கடவுள், பாம்பிடம் நீ இவ்வாறு செய்ததால் கால்நடைகள், காட்டு விலங்குகள் அனைத்திலும் சபிக்கப் பட்டிருப்பாய் . உன் வயிற்றி னால் ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியை (மண்ணை) தின்பாய்.

    உனக்கும் பெண்ணுக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப் படுத்தும். நீ அதன் குதிகாலைக் காயப்படுத்துவாய்' என்றார்.

    அவர் (கர்த்தர்) பெண்ணிடம் 'உன் மகப்பேற்றின் வேதனையை மிகுதியாக்கு வேன். வேதனையில் நீ குழந்தைகளைப் பெறுவாய். ஆயினும் உன் கணவன் மேல் நீ வேட்கை கொள்வாய். அவனோ உன்னை ஆள்வான்' என்றான்.

    அவர் (கர்த்தர்), மனிதனிடம் (ஆதமிடம்) 'உன் மனைவியின் சொல்லைக் கேட்டு உண்ணக் கூடாது என்று நான் கட்டளையிட்டு விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டதால் உன் பொருட்டு நிலம் (பூமி) சபிக்கப் பட்டுள்ளது.

    உன் வாழ் நாளெல்லாம் வருந்தி அதன் பயனை உழைத்து நீ உண்பாய். நீ மண்ணாய் இருக்கிறாய். மண்ணுக்கே திரும்புவாய் என்றார். (ஆதியகாமம் 3:14-19)

    'பிரசவத்தின் போது வேதனையை அதிகப் படுத்திக் கொடுத்தல்' என்பதுதான் ஏவாள் செய்த குற்றத்திற்கு அதிகப் பட்ச தண்டனை என்றும் கணவன் மீது அன்பு கொண்டாலும் அவன் தான் உன்னை ஆள்வான் என்றும் கூறுகிறார் கர்த்தர். ஆண்தான் அதிகாரமுடையவனாக இருப்பான் என்பது முடிவாகக் கூறப்பட்டுள்ளது.

    பிரசவத்தின் போது பெண் மரணத்தின் விளிம்புக்கே செல்கிறாள். சில நேரம் மரணித்தும் விடுகிறாள். இவ்வளவு கடுமையான பயங்கரமான வேதனையைப் பெண்ணுக்குக் கொடுத்து விட்டு அவளை இழிவுபடுத்துவது முறை தானா? சாவை விடக் கசப்பானவள் என்று வர்ணிப்பது முறை தானா? அவளை விஷமக்காரியாகச் சித்தரிப்பது சரிதானா?

    'புழுதியைத் தின்ன வேண்டும்' என்பதுதான பாம்புக்கு கர்த்தர் வழங்கிய தண்டனை. எந்தப் பாம்பாவது புழுதியை அல்லது மண்ணை சாப்பிட்டதைப் பார்த்திருக்கிறீர்களா?

    இந்நிகழ்வின் மூலம் பாம்புக்கும் பெண்களுக்கு மிடையே நிரந்தர யுத்தம் உண்டாக்கப் பட்டுள்ளது. ஏவாளின் சந்ததியை காணும் போதெல்லாம் பாம்பு காலைத் தீண்டவேண்டும். அவர்கள் பாம்பின் தலையை நசுக்க வேண்டும். அதன் படி எல்லா பாம்பும் காலை மட்டும் தான் தீண்டுகிறதா?

    கனியை சாப்பிட்டால் சாவீர்கள்'' என்று முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டி ருந்தும் அதனை சாப்பிட்ட பின்பு ஆதாமும் ஏவாளும் சாகவில்லையே?. கர்த்தரின் கட்டளை அல்லது தீர்க்க தரிசனம் செயலற்றுப் போனது ஏன்? கொஞ்சம் சிந்தியுங்கள்.

    ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தது ஏன்? உண்மையில், ஆதாமும் ஏவாளும் தாங்கள் செய்யப் போகின்ற (பழம் சாப்பிடுகின்ற) காரியம் நல்லதா? கெட்டதா? நன்மையா? தீமையா? என்பதைப் பிரித்து அறியக்கூடிய நிலையில் இருக்க வில்லை.

    கர்த்தரால் தடுக்கப்பட்ட கனியை சாப்பிட்ட போது தான் நன்மை தீமை பற்றிய பகுத்தறிவைப் பெற்றுக் கொள்கிறார்கள். ஒரு தவறைத் தெரிந்து செய்தால் அதற்குப் பெயர் பாவம். பாவம் என்று தெரியாமல் செய்தால் அதற்குப் பெயர் தவறு. ஆதாமும் ஏவாளும் செய்தது பாவமல்ல. தவறு. பகுத்தறிவற்ற நிலையிலிருந்து தவறு செய்த இருவருக்கும் தண்டனை வழங்கி விட்டு பெண் இனத்தை மோசமாகச் சித்தரிப்பது எந்த வகையில் நியாயம்?

    பின் வரும் பைபிள் வசனங்களைக் கவனமாகப் படியுங்கள். 'பாம்பு பெண்ணிடம் நீங்கள் சாகவே மாட்டீர்கள். ஏனெனில், நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்கு தெரியும்.' என்றது. (ஆதியாகமம்:3:4-6)

    ஆண்டவராகிய கடவுள் மனிதனை (ஆதாமை)க் கூப்பிட்டு நீ எங்கே இருக்கின்றாய்? என்று கேட்டார். உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால் எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில் நான் ஆடையின்றி இருந்தேன். எனவே நான் ஒளிந்து கொண்டேன் என்றான் மனிதன்.

    நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? உண்ணக் கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ? என்று (ஆண்டவர்) கேட்டார். (ஆதியகாமம்: 3:9-11)

    பின்பு ஆண்டவராகிய கடவுள், மனிதன் இப்பொழுது நம்முள் ஒருவர் போல் நன்மை, தீமை அறிந்தவனாகி விட்டான். இனி அவன் என்றென்றும் வாழ்வதற்காக வாழ்வின் மரத்திலி ருந்தும் பறித்து உண்ண கையை நீட்டி விடக் கூடாது என்றார். எனவே ஆண்டவராகிய கடவுள் அவன் (மனிதன்) உருவாக்கப்பட்ட அதே மண்ணைப் பண்படுத்த அவனை ஏதேன் தோட்டத்தி லிருந்து வெளியே அனுப்பிவிட்டார்.' (ஆதியகாமம் 3:22)

    நன்மை, தீமை என்றால் என்ன? என்று தெரியாதவர்களாகப் படைக்கப் பட்ட ஆதாமும் ஏவாளும் தடுக்கப்பட்ட கனியைச் சாப்பிட்ட பின்பு தான் பகுத்தறிவைப் பெற்று-கடவுளை போல்- நன்மை தீமை, நல்லது கெட்டது என்ப வற்றை அறிந்து கொள்கிறார்கள்.

    கனியைச் சாப்பிடு முன் தாங்கள் நிர்வாணிகளாக இருக்கின்றோமே என்ற உணர்வு கூட இல்லாமல் இருந்தவர்கள், எப்போது தடுக்கப் பட்ட கனியைச் சாப்பிட்டார்களோ அப்போது தான் வெட்கம், மானம், மரியாதை என்பன பற்றியும் அறிந்து கொள்கிறார்கள். 'மனிதர்களுக்குரிய உணர்வுகளையும் பெற்றுக் கொள்கிறார்கள்.

    தாம் நிர்வாண கோலத்தில் இருப்பதைக் கண்டு கொண்ட ஆதாம் அதே கோலத்தில் கர்த்தரை சந்திக்க வெட்கப் பட்டு ஒளிந்து கொள்கிறார். ஆதாம் எங்கே ஒளிந்திருக்கிறார் என்ப தை அறியாத ஆண்டவர் ஆதாமின் பெயரைக் கூறி சப்தமிட்டு அழைத்து விசாரிக்கிறார்;. வெட்கத்தின் காரணமாக ஒளிந்து கொண்டதாக ஆதாம் காரணம் கூறுகிறார்.

    ஆதாம் தடுக்கப்பட்ட கனியை சாப்பிட்டதன் மூலம், வெட்க உணர்வை பெற்று நம்மில் ஒருவர் போல் பகுத்தறிவை இப்போது பெற்று விட் டார். எனவே ஏதேன் தோட்டத்தில் இனி இவர்கள் இருக்க முடியாது என கூறி அங்கிருந்து அவர்களை கர்த்தர் வெளி யேற்றுகிறார். பாம்புக்கு கொடுக்கப் பட்டிருந்த பகுத்தறிவு கூட ஆதாமுக் கும் ஏவாளுக்கும் கொடுக்கப்பட்டிருக்க வில்லை. பாம்பு பகுத்தறிவோடு படைக்கப்பட்டிருந்ததால் தான் இருவருக் கும் எதிராக சூழ்ச்சி செய்ய முடிந்தது.

    உண்மை இவ்வாறிருக்க சுயபுத்தி இல்லாதவர்களாக, நன்மை தீமை பற்றிய அறிவு இல்லாதவர்களாக இருந்த நிலையில் ஆதாமும் ஏவாளும் ஒரு கனியைச் சாப்பிட்டதற்காக மொத்த பெண்களையே இழிவானவர்களாகக் கூறுவது எப்படி நியாயமாகும்?

    செய்த குற்றத்திற்காக ஆதி மனிதர் களாகிய அவ்விருவருக்கும் கர்த்தர் கடுமையான தண்ட னைகளை வழங்கி பூமிக்கு இறக்கிய பிறகும் கூட பெண் சமூகத்தை இழிவுபடுத்தி பைபிள் வசனங்கள் எழுதப்பட்டிருப்பது எப்படி சரியாகும்?

    இந்நிலையில் முதல் மனிதன் புரிந்த பாவம் தொடக்கம் எல்லா மனிதர்களின் பாவங்களுக்காகவும் இயேசு தன்னையே சிலுவையில் பலி கொடுத்தார் என்று கூறுவதும் நம்புவதும் போதிப்பதும் நியாயம் தானா? கிறிஸ்தவ நண்பர்களே கொஞ்சம் சிந்திக்கக் கூடாதா?

    ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்

    معلومات المادة باللغة الأصلية